நோக்கு

உள நலமும் மனித உரிமைகளும் மதிக்கப்படுகின்ற மற்றும் மேம்படுத்தப்படுகின்ற, அதே நேரத்தில் உளவியல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உரிய நேரத்தில் அனைத்து வசதிகளையும் பெறக்கூடியதாக, ஒருங்கிணைக்கப்பட்ட, வினைத்திறன்மிக்க கலாசாரத்திற்குப் பொருத்தமான உள நலம் மற்றும் உளவில் சமூக கவனிப்பைப் பெறுகின்ற ஒரு சமூகம் பாரபட்டசமற்றதாகவும் மன அழுத்தமற்றதாகவும் திகழும்.

செயற்பணி

செயற்பணி மனித உரிமைகளைப் பாதுகாத்தல், உளவியல் சுகாதர கவனிப்பு, சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு, நோய் தடுப்பு, உளநல மேம்பாடு என்பவற்றின் ஊடாக அனைவரினதும் மன நலனை மேம்படுத்துவதற்கான ஒரு சூழலை உருவாக்குதல்.

உளநல நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான மூலோபாயங்கள்

  • உள நல வாழ்வை மேம்படுத்துதல்
  • தற்கொலையைத் தடுத்தல்
  • மதுபானம் உள்ளிட்ட வஸ்துக்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல்
  • உளநல சேவைகளுக்கான மனித வளங்களையும் உட்கட்டமைப்பையும் பலப்படுத்துதல்
  • வன்முறைகளைத் தடுத்தல்
  • உளவியல் தகவல் கட்டகம் மற்றும் ஆய்வு என்பவற்றின் ஊடாக தகவல் அடிப்படையைப் பலப்படுத்துதல்

இலங்கையின் சுகாதார அமைச்சுக்குள் தேசிய உளநல நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கின்ற தேசிய மட்டத்திலான பிரதான அமைப்பாக உளநல இயக்குநர் குழாம் திகழ்கிறது. நாட்டின் சகல பகுதிகளிலும் உளநல சேவைகளை மதிப்பீடுசெய்தல், கண்காணித்தல், இணைப்பாக்கம்செய்தல், திட்டமிடல் ஆகியவற்றிற்கு உளநல இயக்குநர் குழாம் பொறுப்பு வகிக்கிறது.

இலங்கை மனநோய் மருத்துவ கல்லூரி மற்றும் ஏனைய பொருத்தமான தொழில்சார் நிறுவனங்கள், ஏனைய பொருத்தமான அமைச்சுகள், திணைக்களங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், சிவில் சமூகம் மற்றும் நுகர்வோர் குழுக்கள் என்பவற்றுடன் நெருக்கமாக கூட்டாக இணைந்து உளநல சேவைகள் அமுலாக்கப்படுகின்றன. வரிசை அமைச்சுக்குள் வருகின்ற பிரதான வைத்தியசாலைகளுடன் இணைந்து மாகாண மற்றும் மாவட்ட கட்டகத்தின் ஊடாக இந்த சேவைகள் கிராமங்களுக்கு வழங்கப்படுகின்றன.

2005-2015ஆம் ஆண்டுக்கான உளநல கொள்கை அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து 2005 ஒக்ரோபர் மாதம் கொள்கையிலும் முகாமைத்துவத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களினதும் கௌரவத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கப்பதற்கும் உளநல சேவைகளை கலாசார ரீதியில் பொருத்தமானதும் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாகக் கொண்டதுமான சேவைகளாக்குவதற்கும் சமூகங்கள், குடும்பங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துகின்றவர்கள் ஆகியோர் செயலூக்கத்துடன் ஈடுபடுவதை உறுதிப்படுத்துவதற்கும் ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்பவற்றில் சிறந்த தரத்திலான உளநல சேவைகளை வழங்குவது இந்தக் கொள்கையின் பிரதான நோக்கமாகும்.

உளநலத்தை மேம்படுத்தும்பொருட்டும் சேவைகளை மேம்படுத்தும்பொருட்டும் சுகாதார அமைச்சு 2016-2025 ஆம் ஆண்டுகளுக்கான உளநல கொள்கையை மீளாய்வுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்போது குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைச் செய்துள்ளது. உளநலம் என்பது சுகாதாரத்துடன் இணைந்த ஒரு பகுதியாகும். உளநல பிரச்சினை என்பது ஒரு பொதுவான பிரச்சினையாகும். உளகளாவிய ரீதியில் நால்வருக்கு ஒருவர் என்ற ரீதியில் உளநல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். எனவே உளநல பிரச்சினைகளை அணுகுவது காலத்துக்குகந்த பிரச்சினையாக இருக்கின்றது.

464, 08வது மாடி, டி.பி ஜாயா மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.
(+94) 112 694 033
postmaster@health.gov.lk