இலங்கையில் உளநல சேவை அபிவிருத்தி ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இலங்கையில் முறைசார்ந்த உளநல சேவைகள் 1839ஆம் ஆண்டின் மனநோயாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ் காப்பகமாக ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றைப் பதிவுசெய்கிறது. மூன்று காப்பகங்களில் சனத் தொகை அதிகரித்ததை அடுத்து அங்கொட காப்பகம் குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடியவாறு 1728 கட்டில்களுடன் 1926ஆம் ஆண்டு பூர்த்திசெய்யப்பட்டது. மேலும் 2008 ஒக்ரோபர் மாதமளவில் அது உளநல தேசிய நிறுவகமாகத் (NIMH) தரமுயர்த்தப்பட்டது.

1839ஆம் ஆண்டு ஆளுநர் மெக்கன்சி மனநோயாளர் காப்பகத்தை
ஸ்தாபிப்பதற்கு ஒரு கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்
1926 இல் மனநல மருத்துவமனை
அங்கொட திறக்கப்பட்டது
1943ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முதலாவது
நரம்பியல் உளவியல் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1943ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முதலாவது நரம்பியல் உளவியல் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பகட்ட உளநல சேவைகள் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் முதலில் பெரிய நிறுவனங்களில் ஆரம்பிக்கப்பட்டன. குறைந்த வசதிகளுடன் கண்டி, யாழ்ப்பாணம், காலி ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டன. 1960ஆம் ஆண்டின் பின்னர், மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திற்கு உளநல சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. பின்னா அது சமூக அடிப்படையிலான சேவையாக விரிவுபடுத்தப்பட்டது.

அதன் தேசிய முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் தேசிய உளநல நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 2000/1998ஆம் ஆண்டில் உளநல இயக்குநர் குழாம் ஸ்தாபிக்கப்பட்டது. பணிப்பாளர்/உளநலம், இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

அமைச்சில் முதலாவது பணிப்பாளராக கலாநிதி ஜி. சங்கரநாராயண செயலாற்றினார். அன்றிலிருந்து தற்போதைய நிலை வரைக்கும் பின்வரும் பின்னுரிமையாளர்கள் நிறுவகத்தில் செயலாற்றினர்..

  1. டாக்டர். பி.ஜி. மஹிபால (பதில் பணிப்பாளர்)
  2. டாக்டர். நீல் பெர்னாண்டோ (பதில் பணிப்பாளர்)
  3. டாக்டர். ஹிரந்தி டி சில்வா
  4. டாக்டர். லட்சுமி சோமதுங்க
  5. டாக்டர் இராசஞ்சலி ஹெட்டியாராச்சி (பிரதிப் பணிப்பாளர்)
  6. டாக்டர். சித்ரமாலி டி சில்வா (தற்போது பதவி நிலையில்)

இலங்கை அதன் உளநல சேவைகளில் கடந்த 15 ஆண்டுகளில் பாரிய சேவைகளைக் கடந்து வந்துள்ளது. குறிப்பாக, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் (2015ஆம் ஆண்டிலிருந்து) உளநல சேவை ஏற்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2005ஆம் ஆண்டில், உளநல மற்றும் உளவியல் சமூக செயலணி சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'முகாமைத்துவம் மற்றும் உளவியல் சமூக மற்றும் உளநல சேவைகளை வழங்குவதற்காக தேசிய செயற்றிட்டத்தை' அபிவிருத்தி செய்தது. 2005ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2005-2015 இலங்கை உளநல கொள்கை அங்கீகரிக்கப்பட்டது. அதில் பரவலாக்கப்பட்ட, சமூக அடிப்படையிலான சேவைகளுக்கான தேவை மிகத் தெளிவாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கொள்கையில் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயற்பாட்டு சட்டகம் உருவாக்கப்பட்டிருந்தது. அது தற்பொழுது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, பல்துறைசார் முறைகளைப் பாதுகாக்கின்ற அதேவேளையில் தனிநபர்களின் கௌரவத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துதல் என்பவற்றுடன் கூட்டிணைந்து அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப அவர்கள் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் உளநிலை ஒழுங்கின்மையைத் தடுத்தல், சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பவற்றை வினைத்திறன்மிக்க வகையில் சமமாக அடைவதற்கு இவையனைத்தையும் உள்ளடக்கிய உயர்தரத்திலான உளநல சேவைகளை விருத்திசெய்வதை இந்த கொள்கையின் குறிக்கோளாகும்.

464, 08வது மாடி, டி.பி ஜாயா மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.
(+94) 112 694 033
postmaster@health.gov.lk