இந்த தசாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து முற்றுமுழுதான சுகாதார விநியோக கட்டகத்தில் சுகாதார சேவைகள் பெரிதும் வலுப்படுத்தப்பட்டன. நகர அமைப்புகளில் தனியார்துறை வெளி நோயாளர் கவனிப்பு அதிகூடியளவில் இருந்தாலும் அரச கட்டகத்தின் ஊடாக சுகாதார கவனிப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. சுகாதார கட்டகத்தின் நிர்வாக அதிகாரசபை சுகாதார அமைச்சு, போசணை மற்றும் சுதேச மருத்துவம் (MOH) என்பவற்றினால் நிர்வகிக்கப்படுகின்றது. அத்துடன், இதன் அமுலாக்கம் சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர்களினால் (RDHS) முகாமைப்படுத்தப்படுகின்ற 26 சுகாதார நிர்வாக பிராந்தியங்கள் ஊடாக ஒன்பது மாகாண பணிப்பாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. சுகாதார தடுப்பு சேவைகளின் ஏற்பாடுகளுக்காக ஒவ்வொரு சுகாதார இயக்குநர் குழாமும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவாக பிரிக்கப்படுட்டுள்ளது.

இலங்கையின் 09 மாகாணங்களின் வரைபடம் இலங்கையின் 25 மாவட்டங்களின் வரைபடம்

நிர்வாக பிரமிடு அமைப்பு

தேசிய மட்டத்தில், தேசிய உளநல நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுகின்ற மருத்துவ சுகாதார அதிகாரியின் மத்திய அமைப்பாக உளநல இயக்குநர் குழாம் திகழ்கிறது. தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வழிகாட்டல்கள், கொள்கை அபிவிருத்தி, வருடாந்த செயற்பாட்டு திட்டங்களை அபிவிருத்தி செய்தல், வரவுசெலவு திட்டம், வளங்களை நகர்த்துதல், சம்பந்த துறைகளுடன் கூட்டிணைந்து ஆற்றலைக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய உளநல நிகழ்ச்சித்திட்டங்களை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடுசெய்தல் என்பவற்றை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை இயக்குநர் குழாம் வகிக்கிறது.

464, 08வது மாடி, டி.பி ஜாயா மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.
(+94) 112 694 033
postmaster@health.gov.lk